மாநகராட்சி அலுவலகத்தை மூட நடவடிக்கை எடுப்பாரா ஆணையர்? ஊழியர்கள் பீதி!
கொரோனா நோய்தொற்று திருச்சியை பொறுத்தவரை 2000த்தை நெருங்குகிறது. மாவட்ட மக்களுக்காக பணியாற்றும் மாநகராட்சி அலுவலர்களையும் ஒரு கை பார்த்து வருகிறது இந்த கொரோனா!
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்கனவே பொதுப் பிரிவில் இரண்டு நபர்களும் ஓட்டுநர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இது இல்லாமல் மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பொறியியல் பிரிவில் ஒருவருக்கும், பொது பிரிவிலும் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இவர்களுக்கும் பரிசோதனை நடந்துள்ளது. இப் பரிசோதனையில் 40 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்கு நாட்கள் கழித்து இன்று ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொரோனா பரிசோதனை மேற்கொண்டு விட்டு மாநகராட்சி பணிக்காக அலுவலகத்திற்கும் தொடர்ந்து வந்துள்ளனர். மாவட்ட மக்களுக்காக பணியாற்றும் ஊழியர்களும் மற்றும் பொதுமக்கள் பலரும் வந்து செல்லும் மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை ரிசல்ட்க்கக்கு 4 நாட்களா எடுத்துக் கொள்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அவர்களுடைய குடும்பம் ஒரு புறமும், சேர்ந்து வேலை செய்த சக ஊழியர்கள் ஒருபுறமும் அவர்களுடைய குடும்பமும் ஒருபுறமாக கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். மாநகராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி எதுவும் தெளிக்கப்படவில்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இன்று தொற்று ஏற்பட்டுள்ள ஒருவர் அலுவலகத்தின் வாயிலில் நின்று வெப்பமானியை வைத்து பரிசோதனை செய்த 5வது தொற்றுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மற்ற ஊழியர்களும் பீதியில் உறைந்துள்ளனர். எனவே மாநகராட்சி ஆணையர் உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தை மூட வேண்டும் என்பதே அனைவருடைய கோரிக்கையாக உள்ளது.
மேலும் கோ.அபிஷேகபுர கோட்ட அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் கோவிட் தொற்று உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் சிக்ச்சை பெற்று வருகிறார். மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறும் மாநகராட்சி தன் அலுவலர்களுக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP