திருச்சி தேசிய கல்லூரியும் திருச்சி ரயில்வே காவல் துறையும் இணைந்து நடத்திய உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்:
உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இது நமது திருச்சி தேசியக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக இன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. திருச்சி ரயில்வே காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் அவர்கள் பேரணியை துவக்கி வைத்து மக்களுக்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.
ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற ஒழுக்க கலாசாரத்தை பின்பற்றாதது, பாதுகாப்பற்ற மற்றும் பொருந்தாத ‘உறவு’ காரணமாகவே எச்.ஐ.வி., வைரஸ் அதிகமாக பரவுகிறது. எய்ட்ஸ்
பாதிக்கப்பட்ட தாய் மூலம் பிறக்கும் குழந்தை, பரிசோதிக்கப்படாத ரத்தம், சுத்திகரிக்கப்படாத ஊசி மூலமும் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை பயன்படுத்துவதாலோ;
தொடுவதாலோ; உணவை பரிமாறிக் கொள்வதாலோ பரவாது.எய்ட்சின் வீரியத்தை குறைக்கும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். எய்ட்சை குணப்படுத்த
முடியா விட்டாலும், நீண்ட நாட்கள் வாழ்வதற்கு சிகிச்சை முறைகள் உள்ளன. மற்ற
பரிசோதனைகள் போல எய்ட்ஸ் வைரஸ் குறித்த பரிசோதனையும்சீரான இடைவெளியில் செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் நோய் வருமுன் பாதுகாக்கலாம்.எய்ட்ஸ் வைரஸ் குறித்து 1984ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 3.20 கோடி பேர்
உயிரிழந்துள்ளனர். 2018ல் 7.7 லட்சம் பேர் பலியாகினர்.மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் 2017 கணக்கின் படி, இந்தியாவில் 21 லட்சம் பேர் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பிட்டதக்கது.
இப்பேரணியானது திருச்சி ரயில்வே வளாகத்தில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக பொதுமக்களுக்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை தேசிய கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன பாலாஜி ஒருங்கிணைத்தார்.
இறுதியாக திருச்சி ரயில்வே காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை எடுக்க மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் எடுத்துக் கொண்டனர்.