திருச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் ரூ 4 கோடி பணிகள் நடக்கவில்லை வாக்குவாதம் கூச்சல் வெளிநடப்பு 

திருச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் ரூ 4 கோடி பணிகள் நடக்கவில்லை  வாக்குவாதம் கூச்சல் வெளிநடப்பு 

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி மாதாந்திர கூட்டத்திற்கு தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். இதில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.மன்ற கூட்டம் தொடங்கிய உடனே தேமுதிக உறுப்பினர் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் வார்டுக்கு முறையான வேலைகள் செய்வதில்லை எனக் கூறி மன்ற கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து8 வார்டு உறுப்பினர்கள் அவரவர் வார்டுகளுக்கு எவ்வித வேலையும் செய்யவில்லை என்று கூறி(அதிமுக உறுப்பினர் - 2 ,VCK உறுப்பினர் - 1 , தேமுதிக உறுப்பினர் - 1, சுயட்சை உறுப்பினர் - 4 )உட்பட எட்டு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.அதிமுக 10 வது வார்டு கவுன்சிலர் ஆறுமுகம் சுந்தர் செய்தியாளர்களிடம் கூறும் போது

பொன்னம்பட்டி பேரூராட்சி சிறந்த பேரூராட்சி என அவார்டு வாங்கிய பேரூராட்சி . தற்போது இந்த பேரூராட்சி சீர்குலைந்து நடந்து கொண்டிருக்கிறது. கவுன்சிலர்களிடம் வெளிப்படை தன்மையாக கணக்கு வழக்குகளை காட்ட மறுக்கின்றனர். மூன்று வருடமாக பொது நிதியிலிருந்து எந்த வேலையும் செய்யவில்லை. கழிவு நீர் வாய்க்கால், சாலை வசதி, ஆகியவற்றை இதுவரையிலும் செய்யவில்லை. மேலும் கூட்டம் நடத்த வேண்டும் என்பதற்காகவே மூன்று வருடம் கழித்து இப்பொழுதுதான் பொது நிதியில் இருந்து வேலை செய்ய ஒப்புதல் வைத்துள்ளனர்.அதுவும் இன்னும் தொடங்கவில்லை. மேலும் வேலை எடுத்த காண்ட்ராக்டர்கள் வேலைகளை ஒழுங்காக செய்யவும் இல்லை. அதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் துவரங்குறிச்சி பேருந்து நிலையப் பகுதியில் ரூ 4.30 கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி டெண்டரை எடுத்து இரண்டரை வருடங்கள் ஆகியும் முழுமையாக இன்னும் முடியவில்லை. அதேபோன்று பேருந்து நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்திற்கு செல்லும் சாலையும் டெண்டர் எடுத்து எவ்வித வேலையும் இதுவரையிலும் செய்யவில்லை .செயல் அலுவலர் இதுவரை மூன்று பேர் மாறி உள்ளனர். இவர்கள் செய்ய நினைத்தாலும் இங்கு உள்ளவர்கள் செய்யத் தயங்குகின்றனர். இதனால் மக்களுக்கு எந்தவித பணியையும் செய்ய முடியாத நிலையில் நாங்கள் எங்களது பதவியை ராஜினாமா செய்யவும் ,ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரதம் ,சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் தயங்க மாட்டோம் என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேரூராட்சித் தலைவர் சரண்யா செய்தியாளர்களை சந்தித்தபோது அவர்கள் கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானவை எனவும் நாங்கள் அனைத்து வார்டுகளுக்குமே தேவையான பணிகளை செய்து கொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு வாரத்துக்கும் சுமார் ரூ 30 லட்சம் மதிப்பிலான பணிகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision