இன்று வெளிநாடு செல்ல இருந்த திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்:
திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூரில் கடந்த அக்டோபர் மாதம் சாகுல் என்ற வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. ( தேசிய புலனாய்வு முகமை ) அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். இந்நிலையில் நேற்று காலை கேரளாவிலிருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சி எடமலைப்பட்டி புதூர் சீனிவாசநகர் பகுதியில் வசித்து வரும் சர்புதீன் (30) என்பவர் வீட்டில் திடீரென சோதனை நடத்தினர்.
டிப்ளமோ பட்டதாரியான சர்புதீன் தீவிரவாத இயக்கங்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை செய்தனர். சோதனையின்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று வெளியில் இருந்தும் வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் இருந்து கம்ப்யூட்டர்கள், செல்போன்கள், பாஸ்போர்ட், விசா, வெளிநாடு சென்று வந்த விவரம், இமெயில் விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று துபாய் செல்ல இருந்த நிலையில் நேற்று சோதனை நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அளுந்தூரில் சர்புதீன் நடத்தி வரும் நெட் சென்டரில் சோதனை நடத்தி பின்னர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.