திருச்சி விடுதிகளில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்கள் - ஆட்சியர் அறிவிப்பு!!

திருச்சி விடுதிகளில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்கள் - ஆட்சியர் அறிவிப்பு!!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள 135 சமையலர் பணியிடங்கள் 15700-50000 என்ற ஊதிய பிணைப்பில் ரூ.15-700/- ஊதியத்திலும், துப்புரவாளர் முழு நேரம்-13 காலிப்பணியிடங்களுக்கு ரூ.7,700-24,200 என்ற சிறப்பு காலமுறை ஊதிய பிணைப்பு ரூ.7,700/- ஊதியத்திலும் மற்றும் 80 துப்புரவாளர்( பகுதி நேரம்) ரூ‌.3000/-
தொகுப்பூதியத்திலும் ஆகிய காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

https://youtu.be/hO6NVGIYrpo
Advertisement

விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.18 வயது முதல் 35 வயது உள்ளவர்களாக இருக்க வேண்டும்.திருச்சி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

தகுதியான நபர்கள் திருச்சி மாவட்டம், திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்க்கு 19.10.2020- க்குள் விண்ணப்பிக்க வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.