பெங்களூரில் இருந்து 8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 5 பேர் கைது
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த ஷிஃப்ட் காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து கார் டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் திருச்சியை சேர்ந்த அப்துல் ஜாபர் என்பதும், திருச்சியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காட்டூர் நகுலன், பொன்மாலை பாலசுப்பிரமணி, திருவெறும்பூர் முகமது ரபீக், ஜாஃபர் சாதிக் ஆகியோரின் உடந்தையுடன் பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அப்துல் ஜாபர் நகுலன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 8 லட்சம் மதிப்புள்ள 330 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இரண்டு இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision