திருச்சியில் காற்று மாசு தரக்குறியீடு 128 ஆக உயர்ந்தது

திருச்சியில் காற்று மாசு தரக்குறியீடு 128 ஆக உயர்ந்தது

தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது.

 வாணவேடிக்கை வெடித்தும் சரவெடி கொளுத்தியும் பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடினர். 

ஆனால் , பட்டாசு வெடித்ததால் திருச்சியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. 

 புதன்கிழமை வரை காற்று தர குறியீடு 96 என இருந்த நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடித்ததால் 128 என உயர்ந்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn