மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாம் கட்டமாக இணையவழியில் கணினி முறை குலுக்கல் மூலம் ஒதுக்கீடு
பாராளுமன்ற தேர்தல், 2024-ஐ முன்னிட்டு, 24.திருச்சிராப்பள்ளி பாராளுமன்றத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் குலுக்கல் (1st Randomization) முடிவுற்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் 24,திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்திலிருந்து 660 Ballot Unit மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1280 Ballot Unit-ம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட Ballot Unit-கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் 06.04.2024 மற்றும் 07.04.2024 ஆகிய தினங்களில் பாரத் மிகுமின் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
முதல் நிலை சரிபார்ப்பு பணிக்கு பின்னர், இன்று 08.04.2024 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாவது கூடுதல் ஒதுக்கீடு கணினி குலுக்கல் முறை (Supplementary Randomization (Additional)) தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தலைமையில், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் (பொது)தினேஷ் குமார். மற்றும் அனைத்து அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் 24.திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தேர்தல் பிரிவில் நடைபெற்றதை தொடர்ந்து, 140.திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு 648 எண்ணிக்கையிலும், 141. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு - 612 எண்ணிக்கையிலும், 142. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு 710 எண்ணிக்கையிலும், என ஆக கூடுதல் 1970 எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்படும்.
இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜலெட்சுமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைகள் நிலமெடுப்பு) ஆர்.பாலாஜி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) ந.சீனிவாசன், அங்கிரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision