கல்லூரி உதவி பேராசிரியர் ஓட்டிய கார் கட்டுபாட்டையிழந்து நடைபாதையில் பயணம் - ஒருவர் காயம்

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை சிக்னலில் நான்கு புறமும் எந்நேரமும் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சிக்னல்கள் இருக்கும் பொழுதும் போக்குவரத்து வாகனங்கள் அதிகமாக வருவதால் நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது
இந்திலையில் அரியமங்கலம் பால்பண்ணை அருகே இன்று காலை பெரியார் கல்லூரி உதவி பேராசிரியர் பாத்திமா என்பவர் கார் ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். காலை மழை பெய்து கொண்டிருந்த பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பதட்டத்தில் காரை மீண்டும் நகர்த்தும் பொழுது பிரேக்கிற்க்கு பதிலாக ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியுள்ளார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து இடது புறமாக பாதசாரிகள் நடந்து செல்லும் பகுதிக்கு சென்றது.அப்போது சாலை ஓரமாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதி நின்றது. நல்வாய்ப்பாக பாதசாரிகள் யாரும் அந்த பகுதியில் நிற்கவில்லை. இருசக்கர வாகனத்தில் வந்த கரூர் குளித்தலை கட்டானிமேட்டை சேர்ந்த கேசவன் கட்டிட வேலை செய்யும் கொத்தனார் காயமடைந்தார்
தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் சேதம் அடைந்து விட்டது. திருச்சி கண்டோன்மென்ட் போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision