பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் - மகிளா நீதிமன்றம் உத்தரவு

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் - மகிளா நீதிமன்றம் உத்தரவு

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை அவதூறு பேசியதாக சவுக்குசங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறை அடைக்கப்பட்டார். மேலும் அவர் குண்டர் சட்டத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கர் நேர்காணலை ஒளிபரப்பு செய்த redpix ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் டெல்லியில் 10ஆம் தேதி இரவு பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர். தொடர்ந்து அவரை 13ஆம் தேதி திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு அஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து (27.05.2024) வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று பெலிக்ஸ் ஜெரால்டை விசாரணை நடத்த காவல்துறையினர் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தரப்பில் 7 நாள் கஸ்டடி கேட்கப்பட்ட நிலையில், நீதிபதி ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மீண்டும் நேற்று (21.05.2024) மாலை 03:00 மணி அளவில் அவரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

ஒரு நாள் விசாரணை முடிந்த பின்னர் நேற்று மதியம் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிபதியிடம் காவல்துறை விசாரணையில் இருந்த பொழுது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். இதனையடுத்து ஏற்கனவே 27-ம் தேதி வரை விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலின்படி அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் மீது திருச்சியில் போடப்பட்ட வழக்கிற்கு ஜாமின் கோரி திருச்சி மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீத விசாரணையில், திருச்சி மாவட்ட கணினி சார் குற்ற பிரிவு போலீசார் பெலிக்ஸ் ஜெரால்டு மீது பதியப்பட்ட ஐந்து சட்டப்பிரிவில் வழக்கிற்கு ஜாமின் வழங்கி, ஆறு மாதத்திற்கு திருச்சி மாவட்ட கணினி சார் குற்றப்பிரிவு நிலையத்தில் மாதம் முதல் தேதியும், 15ஆம் தேதியும் கையெழுத்து இட வேண்டும் என நீதிபதி ஜெயபிரதா உத்தரவிட்டுள்ளார்.

ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு மீதான விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. பெலிக்ஸ் தரப்பு வழக்கறிஞர் கென்னடி வாதங்களை முன்வைத்தார். மிக முக்கியமாக டெல்லியிலிருந்து போலீசாரால் பெலிக்ஸ் கடத்தி வரப்பட்டு திருச்சியில் ஆஜர்படுத்தப்பட்டதாக வாதிட்டார். அதற்குரிய ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் பேசியவரை தவிர இவர் எந்த விதத்திலும் தொடர்பில்லை என நீதிபதியிடம் தெரிவித்தார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மனு மீதான விசாரணை உத்தரவு ஒத்திவைப்பதாக ஜெயப்பிரதா தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision