ரோட்டரி கிளப் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 41.32 லட்சம் மதிப்பிலான கொரோனா ICU உபகரணங்கள்!!

ரோட்டரி கிளப் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 41.32 லட்சம் மதிப்பிலான கொரோனா ICU உபகரணங்கள்!!

ரோட்டரி கிளப் ஆஃப் BHEL CITY திருச்சிராப்பள்ளி, ரோட்டரி கிளப் ஆஃப் GREATER SHAHEEN மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் அறக்கட்டளை இணைந்து ரூபாய் 41.3 1 லட்சம் மதிப்பிலான கோவிட்-19 ஐசியு மருத்துவ உபகரணங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா அவர்களிடம் வழங்கினர்.

திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட இதில் 41.31 லட்சம் மதிப்பீட்டிலான கொரோனா ஐசியூ சிகிச்சை உபகரணங்கள் வென்டிலேட்டர் 2, எக்ஸ்-ரே மெஷின் 100MA 2, ட்ரக்காஸ்டமி கிட் 10, 2 டன் ஏசி உபகரணங்கள் 25, கட்டில்கள் 30, மருந்து கொண்டுசெல்லும் டிரோலி 6, மேஜைகள் 30 உள்ளிட்டவை ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது.