திருச்சியில் மாமன்ற உறுப்பினருக்கு ஆதரவாக காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி 57வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துசெல்வம். இவர் திமுகவில் திருச்சி மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இவர் தனது வார்டுக்கு உட்பட்ட நல்லதண்ணீர் தெருவில் புதிதாக தார் சாலையை அமைத்துள்ளார். இந்த சாலையை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் சேதப்படுத்தியதாகவும் சாலையை ஆக்கிரமித்துள்ளதாகவும் இவ்விடம் புகார் வந்தது அடுத்து சாலையை ஆக்கிரமித்துள்ள பெண்களிடம் சென்று மாமன்ற உறுப்பினர் என்ற முறையில் முத்துச்செல்வம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அந்த பெண்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டி அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முத்துசெல்வம் புகார் மனு அளிக்க சென்றார். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கான அவருக்கு ஆதரவாக காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல் ஆணைய அலுவலகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் புகுந்ததை அடுத்து அங்கு துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்கள் அனைவரும் மாமன்ற உறுப்பினர் முத்துசெல்வத்திற்கு ஆதரவாக புகார் கொடுக்க வந்துள்ளோம் என கூறியதால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கூறிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அனைத்து பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் இதைத் தொடர்ந்து மாவட்ட உறுப்பினர் முத்துச்செல்வம் மாநகர ஆணையர் காமினி சந்தித்து புகார் மணிக்கு அளித்தார்.புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை ஆணையர் புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் 1986 இருந்து அப்பகுதி சேர்ந்த நபர் இடத்தை ஆக்கிரமித்து அதன் மீது வழக்கு தொடுத்து பணி செய்ய விடாமல் தடுத்து வந்தார். 2018 ல் அந்த இடம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன், அந்த வழக்கில் 2022-ல் அந்த ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவைப் பெற்றேன்.இதைத் தொடர்ந்து 2023 இடத்தை ஆக்கிரமித்த நபர்
மீண்டும் உயர்நீதிமன்றத்தை வழக்கு தொடுத்தார் ஆனால் அந்த வழக்கில் சர்வேயர் அளவெடுத்து அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டு கடந்த மாதம் 27ஆம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சாலை அமைக்கில் பணி நடைபெற்றது. அதே நாள் மாலை போடப்பட்ட சாலைகளை வழக்கு தொடுத்த இரு பெண்கள் சாலையை சேதப்படுத்தி கொண்டிருந்தபோது அவர்களை நான் கண்டித்தேன் .அவர்கள் தங்களை வீட்டுக்குள் சென்று அங்கிருந்து கல்லால் கல்லை எடுத்து வீசியும் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள்.
இது கடந்த மாதம் நடைபெற்றது ஆனால் கடந்த இரண்டு நாளைக்கு முன்பு அந்த செய்தியை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத திராவிட மாடல் ஆட்சியா என்று பரவ விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இதுகுறித்து திருச்சி மாநகராட்சி காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன். ஒரு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision