மாதிரி பள்ளிகளின் கட்டுமான பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு

திருவெறும்பூரில் 56 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளியின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
அரசு பள்ளி மாணவர்கள் JEE போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளை எழுதி, பெரிய கல்லூரிகளில் சேர பயிற்சி எடுக்கிறதுக்காக இது போன்ற பள்ளிகள் கட்டப்படுகின்றன. இதற்காக மாநில அரசு 56.4 கோடி ரூபாய் செலவு செய்கிறது. பொதுப்பணித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இந்த வேலையை கவனித்து வருகிறார்கள்.
துவாக்குடி அண்ணா வளைவு பக்கத்துல இருக்கிற அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 7.9 ஏக்கர் நிலத்துல கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். இரண்டு மாடி கட்டிடத்தில் அறிவியல் ஆய்வகம், கம்ப்யூட்டர் லேப், பெரிய ஹால், லைப்ரரி, மாற்றுத்திறனாளிகளுக்கான டாய்லெட் வசதிகள் அனைத்தும் இருக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக ஐந்து மாடி ஹாஸ்டல் கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஹாஸ்டலுக்கும் 18 கோடி ரூபாய் செலவு ஆகிறது. இதில் சுமார் 800 மாணவர்கள் வரை தங்கலாம் என்று அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர், இந்த பள்ளிக்கு வாங்கி இருக்கக்கூடிய பர்னிச்சர் எல்லாம் நன்றாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். வரும் கல்வி ஆண்டிற்குள் அனைத்து வேலையும் முடிக்க அதிகாரிகளிடம் கூறினார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறக்கூடிய மதிப்பெண்கள் வச்சுதான் இந்த மாதிரி பள்ளியில் சேர முடியும். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளிடம் வேலையை சீக்கிரமா முடிக்க அறிவுரை வழங்கினார்.
இந்த மாதிரி பள்ளி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் JEE போன்ற நுழைவுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்து பெரிய கல்லூரிகளில் படிக்கலாம். இந்த பள்ளியில் நல்ல வசதிகள் இருப்பதால் மாணவர்கள் நல்லா படிச்சு முன்னேற முடியும். குறிப்பாக ஹாஸ்டல் வசதி இருப்பதால் வெளியூர்ல இருந்து வர்ற மாணவர்களும் தங்கி படிக்கலாம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision