திருச்சியில் 4ஏக்கர் பரப்பளவில் அடர்வன குறுங்காடுகள் - 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

திருச்சியில் 4ஏக்கர் பரப்பளவில் அடர்வன குறுங்காடுகள் - 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் வட்டம் , பூனாம்பாளையம் கிராமத்தில் 4.26 ஏக்கர் பரப்பளவில் மியாவாக்கி முறையில் ( அடர்வன குறுங்காடு ) 50,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு அவர்கள் இன்று ( 17.11.2020 ) தொடங்கி வைத்தார் 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருவாய்த்துறை . இந்துசமய அறநிலையத்துறை , இரயில்வே துறை , பேரூராட்சி , ஆகிய துறைகளை மாவட்ட நிர்வாகம் மூலம் ஒருங்கிணைத்து , மியாவாக்கி முறையில் ( அடர்வன குறுங்காடு ) சிறப்பாக நடப்பட்டு மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது . குறிப்பாக ஸ்ரீரங்கம் பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகள் , ஸ்ரீரங்கம் தெற்குதேவி தெரு பெருமாள்புரம் , சஞ்ஜீவ் நகர் , பாலாஜி நகர் , திருவானைக்கோவில் வடக்கு ஸ்ரீனிவாசநகர் ஆகிய இடங்களில் 35,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது .

தற்போது 15 அடிக்கு மேல் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது . இலால்குடி இரயில்வே ஜங்சன் பகுதியில் 1.75 ஏக்கர் பரப்பளவில் 15,000 மரக்கன்றுகளும் , கல்லக்குடி பேரூராட்சியில் 1.30 ஏக்கர் பரப்பளவில் 20,000 மரக்கன்றுகளும் , சமயபுரம் , மாகாளிக்குடி கிராமத்தில் அருள்மிகு உஜ்ஜையினி ஓம்காளியம்மன் திருக்கோயில் பின்புறம் 0.85 ஏக்கர் பரப்பளவில் 10,000 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது .

மண்ணச்சநல்லூர் வட்டம் , பூனாம்பாளையம் கிராமத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தில் 4.26 ஏக்கர் பரப்பளவில் மியாவாக்கி முறையில் ( அடர்வன குறுங்காடு ) மா , கொய்யா , புளி , வேம்பு , சப்போட்டா , எலும்பிச்சை , வாகை , பூவரசம் , சொர்க்கம் , நீர்மருது , மலைவேம்பு , புங்கன்மரம் . தேக்கு , சிப்பு , வில்வம் , நாகலிங்கம் , இலுப்பை , பலா போன்ற 59 வகையான 50,000 மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று நடப்பட்டது . தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் பராமரிக்கப்படவுள்ளது .

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பழனிகுமார் , இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.வைத்தியநாதன் , மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் திருமதி.த.மலர் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.எஸ்.ராஜேந்திரன் , திரு.எம்.மாதவன் , பூனாம்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் திருஹரிகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .