திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை - திருச்சியில் அஞ்சலி மனு கொடுக்கும் போராட்டம்!!

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை - திருச்சியில் அஞ்சலி மனு கொடுக்கும் போராட்டம்!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திண்டுக்கல்லில் கடந்த வருடம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பாக நியாயம் கேட்டு அமைதிப் போராட்டம் நடந்தது.

Advertisement

 முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக சங்க மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அவருடைய படத்திற்கு அஞ்சலி செலுத்தி அமைதியாக மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்யப்பட்டவரை விடுவித்ததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு முடிதிருத்தும் நலசங்கத்தை  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement