எறும்பீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் முகூர்த்தக்கால் நடும் பணி விமர்சையாக நடைபெற்றது

திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் - முகூர்த்தக்கால் நடும்பணி விமர்சையாக நடந்தது.திருச்சி திருவெறும்பூர் என பெயர் வர காரணமான எறும்பீஸ்வரர் கோயில் திருவெறும்பூர் மலை மேல் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் இறைவன் எறும்பீஸ்வரராகவும் இறைவி நறுங்குழல் நாயகியாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கட்டுப்பாட்டில் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதுகுறித்து பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கவே திருவெறும்பூர் எம்எல்ஏவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை கோவிலுக்கு நேரில் அழைத்து வந்து பக்தர்களின் கோரிக்கை குறித்து தெரிவித்தார்.
அப்பொழுது கோயில் பராமரிப்பு பணிகள் தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் செய்யப்பட்டு வருகிறது அது முடிந்தவுடன் விரைவில் கும்பாபிஷேகம் செய்யப்படும் என்று சேகர்பாபு வாக்குறுதி அளித்து சென்றார்.இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனைப்படி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் ஏப்ரல் 7 ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழாவானது அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது .
இவ்விழாவில் கும்பாபிஷேக உபயதாரர் ரவீந்திரன், 40 வது மாமன்ற உறுப்பினர் சிவக்குமார், திருக்கோயில் செயல் அலுவலர் வித்யா, சரக ஆய்வர் பானுமதி, இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பு உதவியாளர் ஹரிஷ் ராம் , அறங்காவலர் உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், அமுதா மாரியப்பன், நல்லேந்திரன், கருணாகரன் மற்றும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision