கட்டுரைப் போட்டியில் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாவது இடம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் இரண்டாவது பரிசு பெற்ற 9 ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு.பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற அரசுப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி ஹரிணிக்கும், கலைத் திருவிழாவில் வில்லுப்பாட்டு பிரிவில் மாநில அளவில் பங்குபெற்ற தமிழரசன் குழுவினருக்கும் மற்றும் வில் செய்து வழங்கிய 9 ம் வகுப்பு மாணவர் ச.சுதர்சன் ஆகியோருக்கும்
புள்ளம்பாடி பேரூராட்சி தலைவர் திருமதி ஜோ.ஆலிஸ் செல்வராணி செல்வராஜ் ,PTA தலைவர் P.பாஸ்கர் , 15வதுவார்டு உறுப்பினர் & SMC உறுப்பினர் திருமதி வெ.தனலட்சுமி திருநாவுக்கரசு மற்றும் SMC குழு உறுப்பினர் ஜா. ஹென்றி பிரபாகரன் ஆகியோர் இன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் பாராட்டு தெரிவித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். பிற்பகலில் பள்ளிக்கு வருகை புரிந்த சமூக சேவகர் கோமாக்குடி ஆசைத்தம்பி மாணவிக்குப் பாராட்டு தெரிவித்தார்.நிகழ்வில் கலந்து கொண்டு பள்ளியை சிறப்பித்த அனைவருக்கும் பள்ளியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision