பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் - சட்டை கிழிப்பு

பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் - சட்டை கிழிப்பு

பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் - சட்டை கிழிப்புமத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை விளக்கியும், அதனை தமிழ்நாட்டில் அமல்படுத்த வலியுறுத்தியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசை கண்டித்தும், திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தேசிய கல்விக் கொள்கை பற்றி பொதுமக்களிடமும், பள்ளி - கல்லூரி மாணவர்களிடையேயும் விளக்கும் வகையில் இப்பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில், திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து வரவேற்று பேசினார். கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராமசுப்பு, தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். 

இக்கூட்டத்தில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கண்டனப் பேருரையாற்றினார். மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் எல்.முருகன், மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம்,புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்ற போது, பொதுமக்கள், பள்ளி - கல்லூரி, மாணவ, மாணவிகளிடையே மிகுந்த ஆர்வத்துடன் பாஜக வினர் கையெழுத்து வாங்கினானர்கள்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்களுக்களிடையே எடுத்து விளக்கும் வகையில் பாஜக சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தனர். இதன்படி, திருச்சி பெருங்கோட்ட பாஜக சார்பில், இன்று திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்திடவும், அரசு பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழியினை கட்டாயமாக்கிடவும், ஏழை மாணவர்களுக்கும் சமமான கல்வியை கிடைக்கச்செய்ய மறுக்கும் திமுக அரசை கண்டித்தும் பேசினார்கள். 

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதும் பொதுக்கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வந்திருந்தவர்கள் கலையை தொடங்கினர். சேர்கள் காலியாக இருந்தது இதனை பார்த்த திருச்சி தினகரன் செய்திதாளில் பணிபுரியும் புகைப்பட கலைஞர் சுந்தர் புகைப்படம் எடுத்துள்ளார். அதனை பார்த்த பாஜகவினர் அவரை தாக்கியுள்ளனர். புகைப்பட கலைஞர் சுந்தரை காப்பாற்ற முற்பட்ட திருச்சி மாவட்ட சன் தொலைக்காட்சி செய்தியாளர் இஸ்லாம் தாக்கப்பட்டுள்ளார். தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பத்திரிகையாளர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision