தனியார் கல்லூரி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர்தப்பித்தனர்

தனியார் கல்லூரி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர்தப்பித்தனர்

திருச்சி மாவட்டம், கூத்தூர் அருகே மூன்று தனியார் கல்லூரி பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து கூத்தூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற கார் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.அப்போது காரின் பின்னால் சமயபுரம் நோக்கி வந்த எஸ்.ஆர்.எம் கல்லூரி பேருந்தின் ஓட்டுனர் காரின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார்.

அதே நேரத்தில் சமயபுரம் நோக்கி வந்த தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி பேருந்தும் அதனைத்தொடர்ந்து வந்த மற்றொரு எஸ்.ஆர்.எம் கல்லூரி பேருந்தும் அடுத்தடுத்து மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் சிக்கிய பேருந்துகளில் வந்த கல்லூரி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision