ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில்  அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில்  அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததால் மத்திய பேருந்து நிலையத்திற்கு பதிலாக புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

இதனையடுத்து கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வரும் நிலையில் திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று பஞ்சப்பூரில் ஒருங்கினைந்த பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தினை ஆய்வு செய்தார்.

அப்போது இடத்தின் வரைப்படத்தை கொண்டு மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் விளக்கம் கேட்டறிந்தார். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நிலம் அளவீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK