திருச்சியில் நாளை (07/02/2021) குடிநீர் வினியோகம் இருக்காது!!

திருச்சியில் நாளை (07/02/2021) குடிநீர் வினியோகம் இருக்காது!!

Advertisement

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.61 முதல் 65க்குட்பட்ட காட்டூர், திருவெறும்பூர் பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் அரியமங்கலம் கிராமம் அருகே திருவெறும்பூர் உந்து நிலையத்திலிருந்து செல்லும் 700 எம்.எம். விட்டமுள்ள குடிநீர் உந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பழுதுகளை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

எனவே திருவெறும்பூர் ஒன்றிய காலனி, வள்ளுவர் நகர், கைலாஷ் நகர், விக்னேஷ் நகர், வைத்தியலிங்கம் நகர், கணேஷ் நகர், மஞ்சதிடல், சக்தி நகர், ஸ்ரீ பாலாஜி நகர், கொக்கரசம்பேட்டை, எல்லக்குடி, ஆலத்தூர், கே.கே.கோட்டை அக்ரஹாரம், காவேரி நகர், காந்தி நகர், பாத்திமாபுரம், முருகன் கோவில் தெரு, அழகு மாரியம்மன் கோவில் தெரு, பர்மா காலனி, வேணுகோபால் நகர், பாரதிதாசன் நகர், திருநகர் ஆகிய பகுதிகளுக்கு 07.02.2021 தேதி குடிநீர் விநியோகம் இருக்காது.

எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொள்கின்றனர்.