வனப்பாதுகாப்பு குறித்து ஒரு நாள் கருத்தரங்கு கூட்டம்

வனப்பாதுகாப்பு குறித்து ஒரு நாள் கருத்தரங்கு கூட்டம்

இன்று வனவியல் விரிவாக்க அலுவலகம் எம். ஆர் பாளையத்தில் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் இணைந்து விவசாயிகள் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான காலநிலை திறன்மிகு வேளாண்மை, நீர்வள மேலாண்மை, மற்றும் வன பாதுகாப்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு கூட்டம்

திரு M. பிரதீப் குமார் மாவட்ட ஆட்சியர் திருச்சி மற்றும் திரு ஏ.பெரியசாமி தலைமை வனப் பாதுகாவலர் திருச்சி அவர்களின் அறிவுரையின் படியும் திருமதி சி.கிருத்திகா மாவட்ட வன அலுவலர் திருச்சி அவர்களின் ஆலோசனை படியும் நடைபெற்றது.திரு இரா. சரவணகுமார்,உதவி வனப் பாதுகாவலர் வனவியல் விரிவாக்க அலுவலர் திருச்சி அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி துவங்கப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாக மீண்டும் மஞ்சள் பை மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும்

முக்கிய காரணியாக மரம் நடுதல் அமைந்துள்ளது.என்ற கருத்துக்களை பதிவு செய்து பங்கு பெற்றவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பை வழங்கினார். டாக்டர் எம். பாக்கியலட்சுமி உதவி பேராசிரியர் வனவியல் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி சமயபுரம், அவர்கள் காலநிலை மாற்றம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் வன பாதுகாப்பு பசுமைப் பரப்பை அதிகரித்தல் வனவிலங்கு பாதுகாத்தல் போன்ற பல்வேறு கருத்துக்களையும் திரு சி.ராஜேஷ் அவர்கள் உதவி பேராசிரியர் விவசாயம் நாளந்தா வேளாண்மை கல்லூரி, எம்.ஆர் பாளையம் அவர்கள் காலநிலை திறன்மிகு விவசாயம்

நிலையான விவசாய நடைமுறைகள் கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த கருத்துக்களையும் மற்றும் கால்நடை மாற்றத்தை உள்ளடக்கிய பல்வேறு தகவல்களை பங்கேற்றவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் வனசரக அலுவலர் திரு ஜெ.ரவி மற்றும் திரு தீ. கிருஷ்ணன் அவர்கள் மூலம் பயிற்சில் பங்கு பெற்றவர்களுக்கு பல்வேறு நாற்றங்கால் செயல்முறைகள் தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் முறைகள் மரக்கன்று நடவு செய்யும் முறைகள் எடுத்துரைத்து பின்னர் பங்கு பெற்றவர்களுடன் இணைந்து

மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும் இக்கூட்டத்தின் உபயோகப்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத முறையில் பயன்படுத்தப்பட்டது. மேலும் இந்த ஒருநாள் கருத்தரங்க கூட்டம் விவசாயிகள் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயன்பெறும் வகையில் அமைந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திரு ஜெ. ரவி வனச்சரக அலுவலர் அவர்கள் செய்திருந்தார் இந்நிகழ்ச்சியில் திரு எஸ். விக்னேஷ் வனவர் திருமதி பா.கோகிலா வனவர் மற்றும் இதர அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision