அரசு இலவச அடுக்குமாடி குடியிருப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவியை மாற்றக் கோரி மனு

அடுக்குமாடி குடியிருப்பு வீடு இல்லாத மக்களுக்கு இருங்கலூர் கல் பாளையம் பகுதியில் மக்களுக்கு கட்டித் தரப்பட்டது அங்கு குடியேறும் மக்களுக்கு பராமரிப்புத் தொகையாக 250 ரூபாய் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது அங்கு குடியிருக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கும் மக்கள் கொடுக்கும்
250 உதவுகிறது அங்குள்ள குடியிருப்ப பகுதிகளுக்கு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக நிர்வாகிகளை தேர்வு செய்து கொடுத்துள்ளது அங்கு எலக்சன் வைக்கப்பட்டு வாக்குகள் செலுத்தி மக்களால் தலைவர் துணைத் தலைவர் செயலாளர் துணைச் செயலாளர் பொருளாளர் இந்த பதவிக்கான
நிர்வாகிகளை தேர்வு செய்து உள்ளது செயலாளர் பிரபாகர் துணைத் தலைவர் இளையராஜா இவர்கள் இருவரும் நன்றாக மக்களுக்காக செயல்பட்டு வருகின்றார்கள் அங்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராவியத் பசரியா அவருடைய கணவர் யாசின் என்பவர் மற்றும் பொருளாளர் பெருமாள் என்பவரும் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு நிர்வாகத்தில் இருக்கும் மற்ற தலைவர்களை இழிவு படுத்தியும் மிரட்டியும் சங்கத்தை செயல்பட விடாமல் தடுக்கின்றார்கள்
தலைவர் ராவத் பசரியா அவர்கள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவோ அல்லது மக்களை சந்திக்கவோ இந்நாள் வரை வரவும் இல்லை இந்த தலைவி அவர்களுடைய கணவர் கணக்கு வழக்குகளை தலைவிக்கு பதிலாக அவருடைய கணவர் வாங்கி கையெழுத்திட்டு செல்கிறார் இதை மக்கள் தட்டி கேட்டு கேட்டாலும் பொருளாளர் பெருமாள் மற்றும்
தலைவரின் கணவர் யாசின் என்பவரும் சேர்ந்து கொண்டு நாங்கள் அப்படி தான் செய்வோம் அப்படி என்று மிரட்டுகிறார்கள் பொருளாளர் இடம் கணக்கு வழக்குகளை கேட்டால் அதற்கு நாங்கள் தர முடியாது உங்களால் முடிந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளுங்கள் என்று திமிராகவும் மிரட்டல் தோரணையிலும் அங்கு வசிக்கும் மக்களையும் நிர்வாகிகளையும் மிரட்டுகிறார்கள் எனவே நிர்வாகிகளான துணைத் தலைவர் இளையராஜா செயலாளர் பிரபாகர் அங்கு வசிக்கும் மக்களோடு
இணைந்து திருச்சியில் உள்ள குடிசை மாற்று அதிகாரிகளை சந்தித்து தலைவி மற்றும் பொருளாளரை பொறுப்பிலிருந்து அகற்றிவிட்டு செயல்படும் நல்ல தலைவர் பொருளாளரை தேர்ந்தெடுக்கும்படி மனு கொடுக்கும் போராட்டம் இன்று 8/4/2025 காலை 10.30 மணி அளவில் மனு கொடுத்தோம் 15 நாட்களில் பழைய கணக்கு வழக்குகளை சரி பார்த்து விட்டு தலைவர் பொருளாளர் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கிறோம் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர் அங்கு பழைய பொருளாளர் இடம் கணக்கு வழக்குகளை
பெரும் வரையில் பராமரிப்பு கட்டணத்தை மாத மாதம் மக்களிடம் வாங்க கூடாது என்று அதிகாரிகள் கூறியுள்ளார்கள் பராமரிப்பு தொகை சம்பந்தமாகவும் நிர்வாகிகளை மாற்றுவதன் சம்பந்தமாகவும் குடியிருப்பு பகுதிகளில் நோட்டிஸ் ஒட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றார்கள் அதிகாரிகள் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் இறங்கவும் என்று அதிகாரிகளிடம் கூறிக்கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision