சொத்து வரி உயர்வை கண்டித்து திருச்சியில் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை (செவ்வாய்கிழமை) அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், சென்னையில் ஓ.பன்னீர்செல்வமும், திருச்சியில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார்கள்.
திருச்சியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர் வெல்லமண்டி நடராஜன்,ப.குமார், பரஞ்சோதி ஆகியோர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் வகையில், சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தம் என்று கடந்த 11 மாத காலமாக தி.மு.க. அரசு மேற்கொண்டிருக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அராஜக ஆட்சி முறையையும் எதிர்த்து, சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்ட தலைநகரங்களில் நடத்த இருக்கிறது.
மக்கள் நலனை கருத்தில்கொண்டு, அ.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தில் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார்.
திருச்சியில் எடப்பாடி பழனிசாமிதிருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்தலைமை ஏற்று கண்டன பேருரையாற்றயிருக்கிறார்.
மேலும், தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர ,பேரூர் கழக ,கிளை கழக ,மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் எம்ஜிஆர் மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி ,மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு ,இலக்கிய அணி ,மருத்துவ கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,Exகோட்டத்தலைவர்கள்,உள்ளாட்சித் தலைவர்கள் பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள் தலைமை கழக பேச்சாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, மற்றும் இளம்பெண்கள் பாசறை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் கலைப்பிரிவு செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO