திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் கோவிட்டால் உயிரிழப்பு- அச்சத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி வீரர்கள்!

திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் கோவிட்டால் உயிரிழப்பு- அச்சத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி வீரர்கள்!

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000 தொட்டுவிட்டது. திருச்சியில் இதுவரை 36 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்த நிலையில் காஜாமலை ரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த காஜாமலை அருகே உள்ள ரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர்களும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இங்கு 396 பேர் கேரளா, மகாராஷ்டிரா ,உத்திர பிரதேஷ், உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும் பரிசோதனை நடத்த வேண்டும் என வீரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

இம்மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்‌ கடந்த செவ்வாய்க்கிழமை(17.07.2020) தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் இவருடன் சேர்த்து 3 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். திருச்சியை சேர்ந்த 60 வயதுடைய ஆண், 63 வயதுடைய பெண் 63 ஒருவரும் இன்று அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதனால் திருச்சியில் இதுவரை 36 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.