இந்தியில் உள்ள ரயில்வே பெயர் பலகைகளை சிதைப்பதற்கு எதிரான சிறப்பு கண்காணிப்பு

இந்தியில் உள்ள ரயில்வே பெயர் பலகைகளை சிதைப்பதற்கு எதிரான சிறப்பு கண்காணிப்பு.திரு.ஜிஎம் ஈஸ்வர ராவ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத்
நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் திரு. K. P. செபாஸ்டியன் அவர்கள் தலைமையில் இன்று 24.02.2025 திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அங்கத்தினர் திருச்சி நடைமேடைகளில் இந்தியில் உள்ள ரயில்வே பெயர் பலகைகளை சிதைப்பதற்கு எதிராக சிறப்பு இயக்கம் நடத்தப்பட்டது. மேற்படி பாதுகாப்பின் போது திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை
நாய்ப் பிரிவுடன் நடைமேடை பகுதியில் ரோந்து சென்று பயணிகளின் சாமான்கள் மற்றும் பார்சல்களை சோதனை செய்தனர். மேலும் இந்தியில் உள்ள பெயர் பலகைகளை சிதைக்கும் சம்பவங்களைத் தடுக்க நுழைவுச் சாவடிகளில்சோதனைதீவிரப்படுத்தப்பட்ட உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision