திருச்சியில் முதல்வர் எடப்பாடி வருகையால் பொதுத்தேர்வுக்கு தாமதமாக சென்ற மாணவர்கள்!

திருச்சியில் முதல்வர் எடப்பாடி வருகையால் பொதுத்தேர்வுக்கு தாமதமாக சென்ற மாணவர்கள்!

இன்று 26.02.2020 CBSC 10ம் வகுப்பிற்கு பொதுதேர்வு அனைத்து CBSC பள்ளிகளிலும் நடைபெறுகிறது. இதற்காக மாணவர்கள் தயாராகி பரிட்சை எழுதுவதற்காக தங்களுடை தேர்வு மையங்கள் திருச்சி தஞ்சாவூர் ரோட்டில் உள்ள பள்ளிகளுக்கு அவசர அவசரமாக தயராகி பள்ளி வேன்களில் வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் நிகழ்ச்சியை முடித்து கழக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மகன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு காலை 7 மணிக்கு வந்திருந்தார்.டோல்கேட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் காலை உணவு முடித்து தஞ்சைக்கு கிளம்பினார். முதல்வர் வருகையினால் திருச்சி மாநகர் சாலை மற்றும் தஞ்சை, சென்னை சாலைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Advertisement

தேர்வு எழுதுவதற்காக பள்ளி மாணவர்கள் வரும் வழியிலேயே 8.30 மணிக்கே வந்தவர்களை மன்னார்புரம் ரவுண்டானவில் அனைத்து வாகனங்களுடன் நிறுத்தப்பட்டனர். 45 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டு விடபட்டவர்கள் மீண்டும் பால்பண்ணை ரவுண்டானவில் 45 நிமிடம் நிறுத்தபட்டனர்.

ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் பொதுதேர்வு டென்ஷனில் உள்ள மாணவர்களை முதல்வர் வருகிறார் என்று நடுரோட்டில் நிற்க வைத்ததினால் அனேகமான மாணவர்கள் 10 மணி தேர்வுக்கு செல்ல முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானர்கள். மாணவிகள் பலரும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியவில்லை என்ற பயத்தில் கண்ணீர்விட்டு அழுதனர். பெற்றோர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். கடைசியாக கிட்டதட்ட 2 மணி நேர மன உளைச்சலோடு தேர்வுக்கு 10 நிமிடம் தாமதாக சென்று சி.எம். வருகையால் லேட்டாக வந்தாக விளக்கம் கொடுத்து விட்டு மிகுந்த படப்படப்புடன் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினர்.

முதல்வருக்கு பாதுகாப்பு தர வேண்டியதுதான். ஆனால் அது தேர்வு நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கும் பாதிப்பு இல்லாமல் பார்த்து கொள்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தபட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகளின் கடமை என்று எப்போதுதான் உணர்வு வருமோ? என்று பெற்றோர்கள் பாதிக்கபட்டவர்களின் ஆதங்கமாக உள்ளது.