தொடர்ந்து 3 நாளைக்கு எரியும் திருச்சி மகாதீபம்:

தொடர்ந்து 3 நாளைக்கு எரியும் திருச்சி மகாதீபம்:

கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சியில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்பட்டது‌.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாலை 6 மணியளவில்மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானவர் கோயிலிலிருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது

இதற்காக 50 அடி உயரம் உள்ள இரும்பு கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செப்புக் கொப்பரையில் 1000 லிட்டர் எண்ணெய், 6000 மீட்டர் நீளத்தில் திரி மற்றும் 800 கிலோ எடைக்கொண்ட பருத்தித்துணி ஆகியவற்றை கொண்டு தீபம் ஏற்றப்பட்டது.இன்று ஏற்றப்பட்ட தீபம் தொடர்ந்து 3 நாளைக்கு அணையாமல் எரியும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.