திருச்சி மாநகராட்சி வார்டு அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் ,மாநகராட்சி ஆணையர் சரவணன், ஆகியோரின் உத்தரவின்படி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளுக்கான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டமானது தேவர் ஹால் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது .
இக்கூட்டத்தில் குழந்தைகள் நலன் தொடர்பான பணிகளில் செயல்படும் துறை அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீர் யுவகேந்திரா இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
மேலும், குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்காக செயல்படும் சட்டங்களான குழந்தை திருமணம் தடைச்சட்டம் 2006 ,பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 குறித்தும், குழந்தைகள் இடையே போதைப்பொருள் பயன்பாடுகள் குறித்து தகவல் தெரியும் பொழுது, வார்டு அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் இணைந்து செயல்படுவதினால் சமுதாயத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும் என்றும்,இக்குழு கூட்டமானது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய நோக்கம் குறித்தும், குழுவின் பொறுப்பு மற்றும் கடமைகள் குறித்தும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் திருமதி. ஸ்ரீவித்யா அவர்கள் எடுத்துரைத்தார்
அதன் தொடர்ச்சியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப் பணியாளர் பிரியதர்ஷினி குழந்தைகளுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும், குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனை ஏற்பட்டால் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 1098 எண் குறித்தும், குழு உறுப்பினர்களுக்கு விளக்கவுரையாற்றினார் .
இக்கூட்டத்தில் துணை ஆணையர் பாலு , மண்டல தலைவர்கள் ,துர்கா தேவி ,விஜயலட்சுமி கண்ணன் ,உதவி ஆணையர்கள் சண்முகம், சென்னுகிருஷ்ணன், சரவணன், ஜெயபாரதி, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்,பள்ளி மாணவ மாணவிகள், அரசு பணியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision