திருச்சி தேசிய கல்லூரி வணிகவியல் மாணவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர் சேவையை மதிப்பிடுதல்:

திருச்சி தேசிய கல்லூரி வணிகவியல் மாணவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர் சேவையை மதிப்பிடுதல்:

ஒரு அமைப்பு அதன் மக்களைப் போலவே தான் இருக்க முடியும்” என்ற கோட்பாடு என்பது சேவை நிறுவனங்களுக்கு மிகவும் பொருத்தமானது.உயர்ந்த சேவை தரம் என்பது வெற்றியின் எளிய மந்திரமாகும். வங்கித் துறையின் முன்னோடியான இந்திய ஓவர்சீஸ் வங்கி, வாடிக்கையாளர் சேவைகளைப் பற்றியும் மேலும் வங்கியினை தொடர்ந்து முன்னேற்றுவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் நன்கு அறிந்திருக்கிறது, இதற்காக ஒரு மறைநிலை கணக்கெடுப்பை திருச்சி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  முழுவதுமாக நடத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பில் திருச்சி தேசிய கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் மாணவர்கள் திருச்சி மண்டலம் முழுவதுமாக உள்ள 66 கிளைகளுக்கு 132 மாணவர்கள் வங்கியின் மூலமாக பார்வையிடச் சென்றனர். மறைமுகமாக சென்ற இந்த கணக்கெடுப்பில் வாடிக்கையாளர்களின் சேவை, ஒழுக்கம், நடந்துகொள்ளும் முறைகள், ஊழியர்களின் ஈடுபாடு, தயாரிப்பு பற்றி விளக்க உரை கூறுதல் மற்றும் வங்கியின் நடவடிக்கைகள் ஒழுங்குமுறைகள் என 28 வகையான மதிப்பீடுகளை  பார்வையிட்டு அதனை மதிப்பீடு செய்வதற்கும் மாணவர்கள் மறைமுகமாக சென்றனர்.

மாணவர்கள் மதிப்பீட்டு அறிக்கை திருச்சி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.வங்கிகளைப் பற்றி படிக்கும் வணிகவியல் மாணவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பும் , மேலும் அவர்கள் படிப்பதற்கான ஒரு புதிய சிந்தனையாகவும், புதிய அனுபவமாகவும் அமைந்தது.வாடிக்கையாளர் சேவை தரத்தின் பாதிப்புகள் குறித்து  கணக்கீடு செய்ய இந்த ஆய்வு மாணவ மாணவிகளுக்கு ஒரு வாய்ப்பை அளித்தது. உண்மையான வங்கிப் பணி மற்றும் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவையுடனான தொடர்பு மற்றும் வாடிக்கையாளர்களின் கண்ணோட்டத்திலேயே வங்கியை மதிப்பீடு செய்ய சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வணிகவியல் துறைத்தலைவர் K.குமார் ஏற்பாடுகளை செய்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் S.பிரேம் குமார் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணைந்து இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மதிப்பீடுகளை சிறப்பாக செய்து முடித்தனர்.