பெண்களை வைத்து விபசாரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

பெண்களை வைத்து விபசாரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவினருக்கு கடந்த மாதம் 27ம் தேதி கிடைத்த தகவலின் பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொல்காப்பிய தெரு,  குமரன் நகர், வயலூர் ரோடு, திருச்சி என்ற முகவரியில் உள்ள வீட்டை சோதனை செய்த போது அந்த வீட்டில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் (எ) ராஜேஷ், (55) என்பவர் 3 பெண்களை அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி வேலைக்கு அமர்த்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவரவே, மேற்படி ராஜேந்திரன் (எ) ராஜேஷ் என்பவரையும் உடன் வேலை செய்த நால்வரையும், அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களையும் காஜாமலை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இவ்வழக்கின் விசாரணையில், மேற்படி ராஜேந்திரன் (எ) ராஜேஷ் என்பவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் கொடுங்குற்றம் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர், (பொ.) விபச்சார தடுப்பு பிரிவு, அவர்கள் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் ராஜேந்திரன் (எ) ராஜேஷ் என்பவருக்கு இன்று (12.03.2021) குண்டர் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I