சூரியன் FM நடத்தும் திருச்சி சாரதாஸின் “வர்ணஜாலம் 2019” ஓவிய போட்டி:

சூரியன் FM நடத்தும் திருச்சி சாரதாஸின் “வர்ணஜாலம் 2019” ஓவிய போட்டி:

சூரியன் FM நடத்தும் திருச்சி சாரதாஸின் “வர்ணஜாலம் 2019′ ஓவியப் போட்டி நடைபெற உள்ளது. வருகின்ற டிசம்பர் 1ம் தேதி காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை திருச்சியில்  வயலூர் ரோடு, எம்எம் நகரில் உள்ள “மௌண்ட் லிட்ற ஜீ” பள்ளியில் நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.

நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு “பசுமை உலகம்” (Green World) என்னும் தலைப்பிலும்,
ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு “கனவு திருச்சி”(Dream Trichy) என்னும் தலைப்பிலும்,
பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு “தமிழ் கலாச்சாரம்”(Tamil Culture) என்னும் தலைப்பிலும் ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளன.