பெங்களூரு - வேளாங்கண்ணிக்கு திருச்சி வழியாக சிறப்பு வாராந்திர ரயில்

பெங்களூரு - வேளாங்கண்ணிக்கு திருச்சி வழியாக சிறப்பு வாராந்திர ரயில்

வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு பெங்களூருவில் இருந்து சிறப்பு வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா கிறிஸ்தவ ஆலயம் உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு கிறிஸ்தவர்கள் மட்டும் இன்றி இந்துக்களும் அதிக அளவில் வழிபாடு செய்து வருகிறார்கள்.

வேளாங்கண்ணி மாதா கிறிஸ்தவ ஆலயத்திற்கு தமிழகம் மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் பள்ளி கல்லூரிகள் தேர்வு முடிந்த பின்னர் பக்தர்கள் அதிக அளவில் குடும்பத்துடன் வந்து மாதாவை தரிசிப்பார்கள். மேலும் வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

இதன் காரணமாக பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, கீழே பெங்களூரு – வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக கே.எஸ்.ஆர். பெங்களூரு – வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

ரயில் எண்.06547 KSR பெங்களூரு – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் KSR பெங்களூருவில் இருந்து (25.03.2023) முதல் (15.04.2023) வரை இயக்கப்பட உள்ளது. சனிக்கிழமைகளில் 07:50 மணிக்குப் புறப்படும் (4 சேவைகள்) அதே நாளில் வேளாங்கண்ணியை 20:30 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண்.06548 வேளாங்கண்ணி – கே.எஸ்.ஆர். பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் (25.03.2023) முதல் (15.04.2023) வரை சனிக்கிழமைகளில் 23:55 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் (4 சேவைகள்). மறுநாள் மதியம் 12:30 மணிக்கு பெங்களூரு கே.எஸ்.ஆர் சென்றடைகிறது.

இந்த ரயிலில் ஏசி 3-அடுக்கு-13 & ஸ்லீப்பர் வகுப்பு-7 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். பெங்களூரு கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம். ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நீடாமங்கலம். திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த தகவலை திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn