மிதிவண்டிப் போட்டி மற்றும் இருபாலருக்கும் அண்ணா மாரத்தான் போட்டி - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
முன்னாள் தமிழ்நாடு முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் (04.01.2025) அன்று காலை 6:30 மணிக்கு பின்வருமாறு 3 பிரிவுகளில் மாணவ, மாணவியர்களுக்கான அண்ணா சைக்கிள் போட்டிகள் மற்றும் 2 பிரிவுகளில் ஆண் பெண் இருபாலருக்கும் (05.01.2025) அன்று அண்ணா மாரத்தான் போட்டிகள் அண்ணா விளையாட்டரங்கம் சுற்றுப்பாதையில் நடைபெறவுள்ளது.
அண்ணா சைக்கிள் போட்டிகள் :
13 வயதுக்குட்பட்டவர்களுக்கு (1.1.2012க்கு பிறகு பிறந்தவர்கள்) - ஆண்கள் 15 கி.மீ, பெண்கள் 20 கி.மீ,
15 வயதுக்குட்பட்டவர்களுக்கு (1.12010 க்கு பிறகு பிறந்தவர்கள்) - ஆண்கள் 20 கி.மீ, பெண்கள் 15 கி.மீ,
17 வயதுக்குட்பட்டவர்களுக்கு (1.1.2008 க்கு பிறகு பிறந்தவர்கள்) - ஆண்கள் 20 கி.மீ, பெண்கள் 15 கி.மீ.
அண்ணா மாரத்தான் போட்டிகள் :
17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் - ஆண்கள் 8 கி.மீ, பெண்கள் 5 கி.மீ.
25 வயதிற்கு மேற்பட்டவர்கள் - ஆண்கள் 10 கி.மீ, பெண்கள் 5 கி.மீ.
விதிமுறைகள் : போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவ மாணவியர்கள் தங்கள் சொந்த செலவில் சைக்கிளை கொண்டு வருதல் வேண்டும். சாதாரண கைப்பிடி (Handle Bar) கொண்ட மிதி வண்டியாக இருத்தல் வேண்டும் (இரண்டு பிரேக்குகளுடன்).
அகலமான கிராங்க் (Gear) பொருத்தப்பட்ட மிதிவண்டிகளை பயன்படுத்துதல் கூடாது. மிதிவண்டி போட்டி மற்றும் மாரத்தான் போட்டியில் நேரும் எதிர்பாரா விபத்துகளுக்கும் தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்குபெறும் மாணவ / மாணவியர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.
முதல் 10 இடங்களில் வெற்றி பெறும் மாணவ / மாணவியர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். பரிசுத் தொகை வெற்றி பெற்றவர்களின் வங்கி கணக்கில் NEFT மூலம் வழங்க உள்ளதால் வங்கி புத்தக நகலுடன் வருகை தர வேண்டும்.
மாணவ /மாணவியர்கள் சைக்கிள் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே அண்ணா விளையாட்டரங்கத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழுடன் வருகைதர வேண்டும். வயது சான்றிதழ் இல்லாதவர்கள் போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மாரத்தான் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆதார்கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் கொண்டு வருதல் வேண்டும். சான்றிதழ் இல்லாதவர்கள் போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளி தொலைபேசி எண். 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதிபகுமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision