திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியில் அடிதடி-சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறை துணை ஆணையர்கள்

திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியில் அடிதடி-சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறை துணை ஆணையர்கள்

திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினருக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது இந்த மோதலில்ஆழ்வார் தோப்பு பகுதியை சேர்ந்த .அஷ்ரப் அலியின் குடும்பத்தினர் கபீர், வயது 53. அப்பாஸ், வயது, 50. அஷ்ரப் உள்ளிட்ட குடும்பத்தினர் 4. நான்கு பேர்

காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டவர்களை அருவாள் மற்றும் கத்தியை கொண்டு தாக்கியுள்ளதாக கூறுப்படுகிறது,

இது குறித்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவல்துறை துறை துணை ஆணையர்கள் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு பிரச்சனைக்கு என்ன காரணம் என்பதையும் கேட்டு அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர் காயமப்பட்டவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை

தாக்கல் செய்து உள்ளதாக போலீசார் தரப்பு கூறிய நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் போலீஸார்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மனித நேய மக்கள் கட்சியினர்

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர் இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுகையில்,ஆழ்வார் தோப்பு பகுதியில் சட்டவிரோதமான செயல் பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது,இதனை தங்கள் அமைப்பில் உள்ளவர்கள் பலமுறை காவல்துறைக்கு தெரிவித்தும் காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி வந்தனர்இதனால் சம்பவத்தன்று ஒரு தரப்பினர் எங்கள் அமைப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தொடர்ந்து ஆழ்வார் தோப்பு பகுதியில் சமூக விரோதிகள் செயல்பட்டு வருகின்றனர் குறிப்பாக ஆடு சண்டை விடுவது.கோழி சண்டை விடுவது இதுவெல்லாம் கிராமப்புறத்தில் நடைபெறும் ஆனால் இங்கு சிலர் இது போன்று சண்டைகளை ஏற்படுத்தி இளைஞர்களை தவறான வழியில் வழி நடத்தி செல்கின்றனர்.

எனவே ஆழ்வார் தோப்பு பகுதியில் அடிக்கடி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.அடிக்கடி காவல் துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் காவல்துறையினர் இந்த விஷயத்தில் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்காயம் பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள்

1) அஷ்ரப் அலியின் அண்ணன்

கபீர் வயது - 53

அஷ்ரப் அலியின் அண்ணன் 

அப்பாஸ் வயது -50

 அஷரப் அலி, வயது -48  

அஷ்ரப் அலியின் மகன்

முகமது தாஹா17/25

முகமது தாஹாவின் நண்பர் 

முகமது ஆசிப்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision