45 லட்சம் கொடுத்தால் 90 லட்சமாக கொடுப்பதாக கூறி மோசடி!! எல்பின் நிறுவனவர்கள் ரமேஷ், ராஜா மீது வழக்கு பதிவு!!
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (30). காரில் கடத்தி சென்று கொலை செய்ய முயற்சித்த ELFIN கம்பெனியின் ராஜா,ரமேஷ், பால்ராஜ்,அறிவுமணி, பாபு, இளங்கோவன், சாகுல்ஹமீது, பிரபாகரன், பொன்.முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்துள்ளார்.
இந்த மனுவில் திருச்சி கல்லுக்குழியில் உள்ள ELFIN என்ற நிறுவனத்தில் 4,50,000 ரூபாய் பணத்தை முதலீடு செய்ததாகவும், அதனை பத்து மாதத்தில் திரும்ப தரும்போது இரண்டு மடங்காக தருவதாகவும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா, ரமேஷ் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் 45 லட்சம் பணத்தை ELFIN அலுவலகத்தில் ராஜா, ரமேஷ் ஆகியோரிடம் ஒப்படைத்ததாகவும் பத்து மாதம் கழித்து பணம் தேவைப்பட்டால் அசல் தொகையுடன் வட்டியும் சேர்த்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று சம்பாதித்த அனைத்து பணத்தையும் ராஜ்குமார் அவர்களிடம் முதலீடு செய்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் தேவைப்பட்டதால் அதனை தரும்படி பலமுறை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.ஆனால் அவர்கள் சொன்னது போல் நடந்து கொள்ளாமல் ஏமாற்றியதாகவும், இதனால் மனமுடைந்து கடந்த மாதம் 15ம் தேதி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புகார் கொடுத்ததை அறிந்த ராஜா, ரமேஷ் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கடந்த மாதம் 20ம் தேதி மாலை 6 மணியளவில் கல்லுக்குழியில் உள்ள ELFIN அலுவலகத்திற்கு செல்வதற்கான அந்த வழியில் நடந்து கொண்டிருந்தபோது பின்னால் இரண்டு கார்கள் வேகமாக வந்து நின்றதாகவும்,
அதிலிருந்து ராஜா ஒரு காரிலும், ரமேஷ் ஒரு காரிலும் சுமார் 15க்கும் மேற்பட்ட நபர்கள் இறங்கி சூழ்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார். தகாத வார்த்தைகளில் திட்டி “இவனை இங்கேயே அறுத்துக் கொள்ளுங்கள் என்றும் கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டியதாகவும், காசோலைகளை எல்லாத்தையும் கொடுக்கும்படியும் கேட்டுள்ளனர்.
எடுத்து வரவில்லை என்னை விட்டு விடுங்கள் என்று கூறியதாகவும், காரில் வைத்து கடத்த பார்த்ததாகவும் பின் வேறு வழியாக தப்பித்து சென்று என்னுடைய சொந்த ஊர் புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். நான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கு என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி, அடித்து கத்தியை கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்து என்னை கடத்தி காசோலைகளை பறிக்கவும் செய்ய முயற்சித்த மேற்கண்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவில் புகார் அளித்துள்ளார் ராஜ்குமார்.
அதன்படி திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் எல்பின் ராஜா, அவரது சகோதரர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்ட 9 பேர் மீது 147, 148, 341, 294 (b), 323, 596 (2), 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து எல்பின் நிறுவனம் சார்பில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூட இதற்கு ரமேஷ் ராஜா நேரடியாக பதில் அளிக்காமல், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பிரபாகரன் என்பவர்…கொடுத்த தேதியில் பணம் கொடுப்பதாகவும் அதற்கு முன்னால் கொடுக்க முடியாது எனவும், பணமானது சுழற்சிமுறையில் உள்ளதால் இப்போது கொடுக்க முடியாது என பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இதுபோல மோசடி புகார்கள் வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
எல்பின் உரிமையாளர் ராஜா, அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் முருகனை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.