திருச்சி வினோத் கண் மருத்துவமனைக்கு "Icon Of Healthcare"-விருது

Time Of India வழங்கிய "Icon Of Healthcare" ஹோட்டல் மேரியட்டில் மே 29ஆம் தேதி நடைபெற்றது. திருச்சி தஞ்சை டெல்டா பகுதியில் உள்ள கண் மருத்துவமனையில் சிறந்த கண் மருத்துவமனையாக Time Of India- வால் தேர்ந்தெடுக்கப்பட்டு "Icon Of Healthcare" விருது வினோத் கண் மருத்துவமனையின் medical director Dr. வினோத் அருணாச்சலம் அவர்களுக்கு அமைச்சர் கே என் நேரு அவர்களால் வழங்கப்பட்டது.
வினோத் கண் மருத்துவமனையில் சிறப்பு கண் அறுவை சிகிச்சைக்கும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கேற்ற குறைவான கட்டண முறையாகும். இதற்காகவே இவ்விருது வினோத் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மேலும் வினோத் கண் மருத்துவமனை இலவச கண் பரிசோதனை முகாம்களையும் பல்வேறு இடங்களில் நடத்தி வருவதும் சிறப்பாகும்.
வினோத் கண் மருத்துவமனையில் அனைத்து நவீன உபகரணங்களும் வலியில்லா கண் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. கண் சம்பந்தப்பட்ட எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் வினோத் கண் மருத்துவமனை அதற்கு எளிய முறையில் சிகிச்சை வழங்கி அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் கண் சிகிச்சை சேவையை செய்து வருகிறது. சிறந்த நவீன கண் சிகிச்சையை எளிய மக்களும் பெரும் வகையில் கண் மருத்துவ சேவையை வழங்கி வருவதால் வினோத் கண் மருத்துவமனைக்கு இச்சிறப்பான விருது கிடைத்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision