ஸ்ரீரங்கம் கோயில் உடுப்பி பலிமார் மடத்தின் ஸ்ரீ வித்யாதீஷ தீர்தா சுவாமிகளுக்கு மங்களாசனம் நிகழ்ச்சி
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அகோபில மடம்,உடுப்பி மடம், ஆண்டவன் ஆசிரமம் மற்றும் சிருங்கேரி உள்ளிட்ட 5 மடங்களுக்கு இத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற கணக்கில் கோவில் சார்பில் மரியாதை வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி உடுப்பி பலிமார் மடத்தின் வித்யாதீஷ தீர்தா சுவாமிகள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மங்களாசாசனம் எனப்படும் தரிசனம் செய்ய புறப்பட்டார். மேளம் மற்றும் மாலை மரியாதையுடன் ஜீயர் சுவாமிகள் அழைத்துவரப்பட்டு ஸ்ரீரங்கம் ரங்கா கோபுரமும் கோவில் நிர்வாகம் சார்பில் பட்டாச்சாரியர்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கருடாழ்வார், மூலவர், தாயார் மற்றும் தேசிகர் சன்னதிகளில் ஜீயர் சுவாமிகள் தரிசனம் (மங்களாசாசனம்) செய்தார்.
கோவிலில் அவருக்கு வழங்க வேண்டிய தீர்த்தம், சடாரி, அபயஹஷ்தம், தொங்கு பரிவட்டம் உள்ளிட்ட மரியாதைகள் சிறப்பாக வழங்கப்பட்டன. பின்னர் ஜீயர் சுவாமிகளிடம் வழியெங்கும் பக்தர்கள் ஆசி பெற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO