ஊறும் வரலாறு என்ற நூலின் ஆசிரியர் கவிஞர் நந்தலாலா காலமானார்

'ஊறும் வரலாறு' என்ற நூலின் ஆசிரியர் கவிஞர் நந்தலாலா காலமானார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தவர். இவர், திருச்சி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
கவிஞர் நந்தலாலா எழுதிய சில கட்டுரைகள்:
திருச்சி - ஊறும் வரலாறு
இலக்கியம், ஆன்மிகம் போன்ற திருச்சியை பற்றிய பலவகை செய்திகள் பற்றி எழுதியுள்ளார்.கவிஞர் நந்தலாலா எழுதிய 'திருச்சி - ஊறும் வரலாறு' என்ற தொடர், விகடன் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, பின்னர் புத்தகமாக வெளியானது. இந்தப் புத்தகத்தில், இமயமலையை விட வயதான திருச்சி மலைக்கோட்டை பற்றிய தகவல்கள், திருச்சியில் வேளாண்மை, சதங்கையின் ஜதிகளும் `சரிகமபதநி'யும் போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கவிஞர் நந்தலாலா கூறிய சில கருத்துகள்: வாழ்க்கை என்பது அடிப்படையில் தன்னலம் சார்ந்ததல்ல; பிறர் நலம் சார்ந்தது
இந்தியன் வங்கி காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் ஓசூர் அருகில் உள்ள நாராயணா இருதய சிகிச்சை மருத்துவமனையில் பை பாஸ் ஆபரேஷன் செய்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.இன்று இரவு அவருடைய உடல் திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ்நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு, நாளை இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision