விராலிமலை முருகன் கோவிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி செல்போன் டவர் மீது ஏரி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகப் பெருமான் மலை அடிவாரத்தில் இருக்கும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி சமூக ஆர்வலர் ஆறுமுகம் என்கிற ஆரப்பன் என்பவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம்
விராலிமலை முருகன் கோவில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி பல முறை மனு கொடுத்துள்ளார் மேலும் விராலிமலை வட்டாட்சியர் அலுவலர் அவர்களிடமும் விராலிமலை முருகன் கோயில் மலையில் சுற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் மற்றும் இறைச்சி கடைகளையும் அகற்றக்கோரி பலமுறை மனு கொடுத்துள்ளார் இதற்கு வட்டாட்சியர் அவர்களும் மாவட்ட ஆட்சியாளர்
அவர்களும் முறையாக பதில் அளிக்காததால் சமூக ஆர்வலரான ஆரப்பன் என்பவர் இன்று விரக்தியில் இன்று அதிகாலை 6:00 மணி முதல் விராலிமலை முருகன் கோயிலுக்கு எதிரில் உள்ள செல்போன் டவரில் உச்சியில் ஏறி நமது தேசியக் கொடியை ஏற்றி தான்
கொடுத்த மனுவிற்கு நீதி வேண்டும் என்று விராலிமலை முருகன் கோவில் எதிரில் உள்ள செல் போன் டவரில் உச்சியில் ஏறி தேசிய கொடியை பிடித்த படி காலையிலிருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார் இது சம்பந்தமாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அரசு அதிகாரிகள் மந்தனைப் போக்கில் இதுவரையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவருடைய மனு மீது உரிய நடவடிக்கை எதுவும் எடுப்பதாக உறுதி கூறாமல் பெயரளவுக்கு அவரிடம் பேசி வருகின்றனர் இது சம்பந்தமாக உடனடியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரடி கண்காணிப்பில் ஆறுமுகம் என்கிற
ஆரப்பனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு விரைவில் போராட்டம் நடத்தி வரும் சமுக அலுவலரிடம் பேசி அவருடைய மனு மீது உரிய விசாரணை செய்யவும் விராலிமலை முருகன் கோவில் ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்கும்படி இந்த பதிவு மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது
இப்படிக்கு பொதுநலன் கருதி சரவணன் MBA ,BL., வழக்கறிஞர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision