சமயபுரம் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரு தினங்களுக்கு சிறப்பு அறிவிப்பு

சமயபுரம் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரு  தினங்களுக்கு சிறப்பு அறிவிப்பு

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்,திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் சித்திரை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல்

 வருகின்ற 15.04.2025 நடைபெற உள்ளது. சித்திரை தேர் திருவிழாவினை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் 1404.2025 அன்று காலை முதல் வருகை தருவார்கள்.

பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கத்தோடும் பக்தர்களின் நலன் கருதியும் 14.04.2025 காலை 5.30 முதல் 15.04.2025 இரவு 9 மணிவரை இலட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதால் இவ்விரு தினங்களிலும் ரூ.100 கட்டண தரிசனத்தினை ரத்து செய்து முற்றிலும் கட்டணமில்லாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision