உய்யக்கொண்டான் கால்வாய் குறுக்கே நடைபாதை பாலம் அமைக்க மீண்டும் டெண்டர்

திருச்சி உய்யக்கொண்டான் கால்வாயில் நடைபாதை பாலம் அமைக்க மூன்றாவது முறையாக திருச்சி மாநகராட்சி டெண்டர் அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் நகரத்தின் வழியாக செல்லும் உய்யர்கொண்டான் கால்வாயின் குறுக்கே நடைபாதை பாலம் அமைப்பதற்கான திட்டத்தை திருச்சி மாநகராட்சி முன்மொழிந்தது.
ஒப்புதலை தொடர்ந்து நகராட்சி கலந்த ஆண்டு இரண்டு முறை திட்டத்திற்கான டெண்டரை வெளியிட்டது ஆனால் எந்த ஏலமும் பெறவில்லை எனவே திட்ட மதிப்பீட்டை திருத்தி கால்வாயில் நடைபாதை பாலம் கட்டுவதற்கு பொருத்தமான ஒப்பந்ததாரரை கண்டறிய மறு டெண்டரை வெளியிட்டுள்ளது.
மாநகராட்சியின் து 2024-25 ஆம் ஆண்டுக்கான பொது நிதியிலிருந்து ரூபாய் 1.4கோடி
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தென்னூரில் உள்ள உழவர் சந்தையை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள அண்ணாநகர் இனிப்பு சாலையுடன் இணைக்கும் இந்த நடைபாதை பாவம் 20 அடி அகலத்தில் இருக்கும் இது பாதசாரிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும.
ஏலம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 11 ஆகும் டெண்டர் பெறப்பட்ட பின்பு பணிகள் விரரைவாக தொடங்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் நிறைவு செய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision