இந்திய சுதந்திர போராட்ட வரலாறு புகைப்பட கண்காட்சியில் பரிசுகளை வென்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள்

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு புகைப்பட கண்காட்சியில் பரிசுகளை வென்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள்

தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் 75வது சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவினை முன்னிட்டு இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜான் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் கள விளம்பரத்துறை அலுவலர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை கலந்து கொண்டு அரியவகை புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் இந்நிகழ்ச்சி குறித்த கையேடுகளை வெளியிட்டார்.பிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாற்றுத் துறை மாணவர்கள் கலந்துகொண்டு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.

 பின்னர் அங்கு மாணவர்களிடையே இந்திய வரலாறு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் தினேஷ் பாலா, லோக் சஞ்சய்,விஜய் ஆகியோர்  சரியான பதிலை சொல்லி பரிசுகளையும் பெற்றனர் .

இந்நிகழ்ச்சியில் வரலாற்றுத் துறை சேர்ந்த அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO