வாக்காளர் அடையாள அட்டை : வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி?

வாக்காளர் அடையாள அட்டை : வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி?

இப்போது நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் உங்களது வாக்காளர் அட்டையை டவுண்லோடு செய்யும் வசதி வந்து விட்டது. அதற்கு சில எளிய நடைமுறைகளைப் பின்பற்றனாலே போதும் வாக்காளர் அட்டையைப் பெற்றுவிடலாம். இதன் மூலம் நீங்கள் சைபர் கஃபேக்களுக்குச் செல்வதை தவிர்த்து விடலாம். வீட்டில் இருந்தபடியே நிமிடங்களில் வாக்காளர் அடையாள அட்டையை எப்படி டவுண்லோடு செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பதும், அதை டவுன்லோடு செய்வதும் ஒரே செயல்முறையில் வாயிலாகச் செய்து விடலாம்.

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் பல நேரங்களில் பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையைப் டவுண்லோடு செய்து கொள்ளும் வசதியை மக்களுக்கு வழங்கியுள்ளது. நீங்கள் விரும்பினால், வாக்காளர் அட்டையின் e-EPIC (டிஜிட்டல் நகல்) டவுண்லோடு செய்யலாம். டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுண்லோடு செய்வதற்கான முழு செயல்முறையையும் இங்கே தரப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் மொபைல்போனில் டவுண்லோடு செய்வதோடு, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையையும் டிஜிலாக்கரில் அப்லோடு செய்யலாம்.

வாக்காளர் அட்டையை டவுண்லோடு செய்வதற்கு முதலில் தேர்தல் ஆணையத்தின் https://voterportal.eci.gov.in (or) https://old.eci.gov.in/e-epic/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்குச் செல்ல வேண்டும். இந்த போர்டலில் ஒரு அக்கவுன்ட்டை உருவாக்க வேண்டும். தேவையான விவரங்களை பூர்த்தி செய்து நீங்கள் இதில் லாகின் செய்யலாம். பின்னர் உங்களது தேர்தல் போட்டோ அடையாள அட்டையை உள்ளீடு செய்யுங்கள். அத்துடன் உங்கள் விண்ணப்ப ரெபரன்ஸ் எண்ணையும் மாநிலத்தையும் தேர்வு செய்யுங்கள். இதைத் தொடர்ந்து உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபியை உள்ளிட்டு வாக்காளர் அட்டையை டவுண்லோடு செய்வதற்கான ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். நீங்கள் e-EPIC என்பதை டவுண்லோடு செய்ய கிளிக் செய்தவுடன் இஎபிக் வாக்காளர் அட்டை டவுண்லோடு ஆகிவிடும்.

இந்த டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து நீங்கள் ஒரு டூப்ளிகேட் வாக்காளர் அட்டையையும் பெறலாம். அதுமட்டுமல்லாமல் அதை வைத்து உங்களது முகவரியையும் மாற்ற முடியும். என்எஸ்விபி போர்டலில் உங்களது முகவரி மாற்றத்துக்கு நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உங்களது விவரங்கள் அப்டேட் ஆனவுடன் நீங்கள் திருத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை டவுண்லோடு செய்து கொள்ளலாம். 

 டிஜிட்டல் வாக்காளர் அட்டை பெறுவது எப்படி.. ரொம்ப ஈசி.. வெறும் 5 நிமிடம் போதும்..! முக்கியத்துவம் பெறும் ஆதார்..! ஆதார் - பான் இணைப்பு போல, இனி ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு..!! டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. எப்படி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது? டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. எப்படி மொபைலில் டவுன்லோடு செய்யலாம்..! டிஜிலாக்கர் கணக்கினை எப்படி தொடங்குவது? இதன் பயன் என்ன? இதோ விவரங்கள்..! டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. இன்று முதல் வாக்காளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..!

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision