உலக ஈரநில நாள் - மாவட்ட அளவிலான ஓவியப்போட்டிகள் அறிவிப்பு

உலக ஈரநில நாள் - மாவட்ட அளவிலான ஓவியப்போட்டிகள் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ஆம் தேதி உலக ஈரநில நாள் (World Wetland day) வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதே போல் இவ்வாண்டும் இந்த நாளினை (02.02.2025) முன்னிட்டு மாவட்ட அளவிலான ஓவியப்போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் விருப்பம் உள்ளவர்கள் தங்களது பள்ளி மற்றும் கல்லூரி வழியாக மாணவர்கள் (25.01.2025) அன்று காலை 10:00 மணியளவில் புனித சிலுவை கல்லூரி தன்னாட்சி (Holy Cross College Autonomous) தெப்பக்குளம், (மலைக்கோட்டை அருகில்) நேரில் வந்து போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

போட்டிகள் கீழ்க்கண்டவாறு நடத்தப்படுகிறது.

பள்ளிகளுக்கானது ஓவியப் போட்டி தலைப்பு : Protecting Wetland for our Common Future.

Group 'A' - I Std to V Std

Group 'B' - VI Std to VIII Std

Group 'C' - IX Std to XII Std

கல்லூரிகளுக்கானது ஓவியப் போட்டி தலைப்பு : (Protecting Wetland for our Common Future.) ஓவிய போட்டியில் பங்கு பெறும் மாணவ, மாணவிகள் தங்களின் வரைபடத்தில் ஈரநிலை தொடர்பான வாசகங்களை (Sloans) தவறாது குறிப்பிடவும்.

ஓவிய போட்டியில் பங்கு பெறும் மாணவ, மாணவிகள் வினாடி-வினா போட்டியில் கலந்து கொள்ளலாம் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தமிழ்நாடு மாநில ஈரநில ஆணைய வழிகாட்டுதலின்படி பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அலைபேசி எண் : 86670 95032 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று திருச்சிராப்பள்ளி வனச்சரக அலுவலர் V.கோபிநாத் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision