3 மாதமாக காணமல் போன ஹரியானாவை சேர்ந்தவரை அவர்கள் குடும்பத்தோடு சேர்த்து வைத்த திருச்சி காவல் அதிகாரி!!

3 மாதமாக காணமல் போன ஹரியானாவை  சேர்ந்தவரை  அவர்கள் குடும்பத்தோடு சேர்த்து வைத்த திருச்சி காவல் அதிகாரி!!

இந்த கொரோனா ஊரடங்கு காலம் பலருடைய வாழ்க்கையில் பல மாறுதல்களையும் திருப்பங்களையும் சந்திக்க வைத்துள்ளது. அந்த வகையில் ஹரியானாவில் காணாமல் போனவரை அவர்கள் குடும்பத்தோடு சேர்த்து திருச்சி காவல் அதிகாரி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பை காண்போம்.

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2020-06-08-at-8.29.04-PM-248x300.jpeg
நிதேஷ்.

ஹரியானா மாநிலம் பஹதுர்ஷா மாவட்டத்தை சேர்ந்தவர் நிதேஷ். இவருடைய தந்தை சுபோஸ் சர்மா. சில நாட்களுக்கு முன்பு நிதேஷை காணவில்லை என ஹரியானா மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையர் மணிகண்டன்  திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது பஞ்சப்பூர் அருகே நிதேஷை கண்டுள்ளார். பின் அவரை விசாரித்து அழைத்து வந்து இரண்டு நாட்களுக்கு புது ஆடைகள் எடுத்து கொடுத்து கங்காரு கருணை இல்லத்தில் சேர்த்தார்.

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2020-06-08-at-9.22.10-PM-251x300.jpeg
காவல் உதவி ஆணையர் மணிகண்டன் 

திருச்சி எடமலைப்பட்டிபுதூர்  காவல் நிலையம் மூலம் காவல் அழைப்பு எண் 100ல் இருந்து ஹரியானாவிற்கு தொடர்புகொண்டு கண்டறியப்பட்ட தகவலைக் கொடுத்து, இங்கு உள்ளதையும் கூறியிருக்கின்றனர்.

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2020-06-08-at-8.28.38-PM-300x223.jpeg

இந்நிலையில் மீட்கப்பட்ட நிதேஷ், கடந்த 5ம் தேதி ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் ஜான்சிக்கு காவல்துறை உதவி ஆணையர் மணிகண்டன்  திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உதவியோடு திருச்சியிலிருந்து அனுப்பப்பட்டார். இன்று ஜான்சி ரயில்நிலையம் சந்திப்பில் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2020-06-08-at-8.28.50-PM-300x235.jpeg

காணாமல் போன வரை மீட்டு தங்களுடைய குடும்பத்தில் சேர்த்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் திருச்சி காவல் உதவி ஆணையர் மணிகண்டன்!