தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்-உறுதிமொழி

தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்-உறுதிமொழி

தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் உறுதிமொழியேற்று இன்று(14.04.2025) காலை 8.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் மத்திய மண்டல துணை இயக்குநர் குமார் தலைமையில்

திருச்சி மாவட்ட அலுவலர் வினோத் அவர்களுடன் திருச்சி நிலைய தீயணைப்பு வீரர்கள் இணைந்து வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நீர்த்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தீத்தொண்டு வாரத்தை அனுசரிக்கும் விதமாக' தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்'என்ற தலைப்பின் கீழ் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும்

பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளிலும் பிரச்சாரங்கள், செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பித்தல் தீ அபாயமுள்ள இடங்களுக்கு சென்று தீத்தடுப்பு தீபாதுகாப்பு மற்றும் தீயணைக்கும் முறைகள் பற்றியும் தீயணைப்புக் கருவிகள் பாராமரிக்கப்பட வேண்டியுள்ள மேற்கொள்ளப்படவுள்ளது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision