துறையூரில் கொலை செய்து தப்பிய வட மாநிலத்தவர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட துறையூர் மலையப்பன் சாலையை சேர்ந்தவர் கண்ணையன்.இவர் மத்திய பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் தன்னுடைய வீட்டிற்கு உள் அலங்காரம் செய்வதற்காக மேற்கு வங்கத்தை சேர்ந்த தரம் சர்மா(31) என்பவரின் தலைமையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிண்டு(28)சச்சின் குமார்(26) ஆகியோரை தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் தங்கி பணிபுரிய அமர்த்தி இருந்தார்.இந்நிலையில் மேற்பார்வளரான தரம் சர்மா பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்களும் சரியான முறையில் சம்பளம் பட்டுவாடா செய்யவில்லை. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி இரவு ஷர்மா மற்றும் சிண்டு சச்சின் குமார் ஆகியோருக்கு இடையே சம்பளப் பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த சிண்டு சச்சின் குமார் ஆகியோர் கீழே கடந்த சுத்தியலை எடுத்து தரம் சர்மாவின் தலையில் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
சிண்டு மற்றும் சச்சின் குமார் இருவரும் கண்ணையனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தப்பித்துச் சென்றனர். இரவு வீட்டின் கேட்டை பூட்டுவதற்காக வந்த கண்ணையன் தரம் சர்மா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தரம் சர்மாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு சிகிச்சையில் இருந்த தரம் சர்மா 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக துறையூர் காவல் நிலைய குற்றம் 351/2023u/s@307 IPC எண் படி வழக்கு செய்ய வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கு தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ.செல்வநாகரத்தினம் அவர்களின் உத்தரவின் பேரில் துறையூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ்குமார் என்பவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளைத் தேடிவந்த நிலையில் எதிரிகள் பீகாரில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
(சச்சின்)
மேற்படி தனிப்படையினர் கடந்த 17.03.2025 தேதி பீகார் மாநிலம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் எதிரிகள் அரியானா மாநிலத்தில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் அரியானா மாநிலம் சென்று தேடி வந்தனர் இதன் அடிப்படையில் 22.03.225 தேதி ரெண்டு மணி அளவில் வழக்கின் A2 எதிரி சச்சின் என்கின்ற சச்சின் குமார் 22/25 தபால் பெட்டியின் விஜய் பஸ்வன் இங்கிலீஷ் டோலா மகேஷ் குண்ட் பீகார் என்பவரை அரியானா மாநிலத்தில் வைத்து கைது செய்து துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மேற்படி வழக்கில் A1 எதிரியான சேட்டு என்கின்ற சிண்டு என்பவரை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision