திருச்சி மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் , பழச்சாறு - காவல் ஆணையர் தொடங்கிவைப்பு

திருச்சி மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் , பழச்சாறு - காவல் ஆணையர் தொடங்கிவைப்பு

திருச்சி மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் , பழச்சாறு - காவல் ஆணையர் தொடங்கிவைப்பு

தற்போது கோடைகாலம் துவங்கியுள்ளநிலையில், மாநகர சாலைகளில் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு வழங்க மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் உத்தரவிட்டு மார்ச் மாதம் முதல் ஜீன்மாதம் வரை போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது.

நடப்பாண்டு போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்கும் நிகழ்வு இன்று டிவிஎஸ் டோல்கேட்டில் நடந்தது. இதில் திருச்சி மாநகர காவல்ஆணையர் காமினி அவர்கள் பங்கேற்று, காவலர்களுக்கு மோர் மற்றும் பழச்சாறு வழங்கி நிகழ்வை தொடக்கி வைத்தார். மேலும் வெயிலை தாங்கும் தொப்பிகளையும் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கினார்.

மார்ச் முதல் ஜீன் மாதம் வரை திருச்சி மாநகரில் பணிபுரியும் 244 போக்குவரத்து காவலர்களுக்கு காலை மற்றும் மதியம் ஆகிய இரண்டு வேளையும் மோர் மற்றும் எழுமிச்சை பழச்சாறு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில், மாநகர காவல் துணைஆணையர்கள் ஈஸ்வரன், சிபின் மற்றும் காவல் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

தொடர்ந்து பேசிய மாநகர காவல் ஆணையர்... சிக்னல்களில் பயணிகள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள பச்சை நிற பந்தல்கள் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளதாகவும், நிதி ஒதுக்கிதந்த பின்னர் கூடியவிரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்களும் போலீசாரும் மோர், பழச்சாறு உள்ளிட்ட நீர்ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision