திருச்சியில் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!

திருச்சியில் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் பாதுகாப்பு வாகனம் திருச்சியிலிருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பஞ்சப்பூர் அருகே இருசக்கர வாகனத்தினை எதிர் திசையில் ஓட்டி வந்த அப்துல் மீது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.